tamilnadu

img

அறிவியல் கதிர் -தொகுப்பு : ரமணன்

விண்ணிலும் 3 டி பிரிண்ட்


அமெரிக்க சிலிக்கன் பள்ளத்தாக்கிலுள்ள ‘மேட் இன் ஸ்பேஸ்’ என்கிற நிறுவனத்திற்கு நாசாவின் 73 மில்லியன் டாலர்  தொகைக்கான காண்ட்ராக்ட் கிடைத்துள்ளது. அர்கிநாட் எனும் சிறிய விண்கலம் பூமியின் தாழ் வட்டப்பாதையில் விண்கலத்தின் பாகங்களை 3 டி பிரிண்ட் முறையில் கட்டமைக்கப்பதற்காகவே  இந்த ஒப்பந்தம். இந்த விண்கலம் இரண்டு பக்கங்களிலும் 32அடி நீளமுள்ள இறக்கைகளை 3 டி முறையில் அச்சுவார்க்கும். 2022ஆம் ஆண்டிற்குள்ளாகவே இது தயாரிக்கப்பட்டுவிடும் என்று நாசா கூறுகிறது.

மனித - யானைகள் மோதல் ஏன்?

சுற்று சூழல் காரணிகள் மற்றும் மனித நடவடிக்கைகள் யானைகளின் வாழ்விடத்தை சிதைத்தது மட்டுமல்லாமல் அதன் சமூக நடத்தைகளையும் மாற்றியுள்ளது என பெங்களூரிலுள்ள மேம்பட்ட ஆய்வுகளுக்கான தேசிய மையம்(NIAS) தெரிவித்துள்ளது. முன்பு காட்டுப் பகுதியில் தனியாகவோ அல்லது இரண்டு பாலினங்களும் கலந்த எல்லா வயதுப் பிரிவுகளும் இருந்த குழுவாக ஆண் யானைகள் வசித்த வந்தன.மனிதன் நிலப் பகுதிகளை மாற்றியமைத்தபின் அங்கு ஆண் யானைகள் மட்டும் குழுவாக வசிப்பது அதிகரித்துள்ளது என அந்த ஆய்வில் தெரிகிறது. பிப்ரவரி 2016இலிருந்து டிசம்பர் 2017 வரை கர்நாடகா மற்றும் தமிழ்நாடு காட்டுப் பகுதிகள், வயல்கள், மனிதர்கள்  வசிக்கும் பகுதிகள் ஆகியவை உள்ளடக்கிய 1௦௦௦௦ சதுர கிலோமீட்டர் பரப்பளவில் யானைகளின் நடமாட்டத்தை ஆய்வு செய்தார்கள். வயல்களுக்கு வரும் யானைகளையும் காடுகளிலேயே தங்கியிருக்கும் யானைகளையும் காமிராப் பொறிகளை வைத்து கண்காணித்தார்கள்.வயதுக்கு வந்த ஆண் யானைகள் தங்கள் இனப் பெருக்க வலிமையை அதிகரித்துக் கொள்ள கூட்டத்தைவிட்டு விலகி நல்ல உணவைத் தேடி போவது வழக்கம்.துணையைத் தேடுவதற்காகவும் இது நடக்கும்.ஆனால் வழக்கமாக அவை தனியாகத்தான் அலைந்து திரியும்.ஆனால் அண்மைக் காலங்களில் ஆண் யானைகள் குழுவாக தங்களை அமைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன.அதிகரிக்கும் சாலைகள்,மின் கம்பிகள் போன்றவற்றால் மாறிவரும் அபாயகரமான சுற்று சூழல் காரணமாக அவை தனியாக இருப்பதை தவிர்த்து கூட்டமாக இருக்கத் தொடங்கியுள்ளன.இது அவைகளுக்கு பலவிதங்களில் உதவுகின்றது என்கிறார் நியாசை(NIAS) சேர்ந்த ஆய்வு மாணவர் நிஷாந்த் ஸிரீனிவாசையா 

அந்த நிலப் பகுதியைப் பற்றி நன்கு அறிந்த யானைகள் சரியான வழியில் குழுவை நடத்தி செல்லவும் சத்தான உணவுகளைக் கண்டறியவும் மனிதர்கள் நிறைந்த பகுதிகளில் தப்பிக்கவும் உதவுகின்றன.அதிக உணவு ஆதாரங்கள் நிறைந்தததும் ஆனால் அதிக ஆபத்தானதுமான  பகுதிகளில் இளம் ஆண் யானைகளுக்கு இப்படி குழுவாக செல்வது ஒரு அவசியமான மாற்றமாக இருக்கிறது. இதுபோல் ஆண்கள் மட்டுமே உள்ள குழுக்கள் பேபூன் குரங்குகள்,ஆசிய ஆப்பிரிக்க சிங்கங்கள் ஆகியவைகளிடமும் காணப்படுகின்றன..இது சேர்ந்து இருக்கும் பழக்கம் மற்றும் இனப்பெருக்கத்தில் மேலாதிக்கம் செலுத்துவது ஆகிய காரணங்களுக்காக உள்ள  ஏற்பாடு.ஆனால் யானைகளைப் பொறுத்தவரை இது ஆபத்துகளிலிருந்து தப்பிப்பதற்கான ஏற்பாடு.எனவே இவைகளை மேலும் ஆய்வு செய்வது மனித –யானை மோதல்களை சமாளிக்க புதிய உத்திகளை வரைவதற்கு உதவும் ரசிய விண்வெளி தொலைநோக்கி  கசகஸ்தானிலுள்ள பைகோனூர் ஏவுதளத்திலிருந்து ரசியா விண்வெளி தொலைநோக்கி ஒன்றை ஜெர்மனி நாட்டுடன் இணைந்து செலுத்தியுள்ளது.இதற்கு ஸ்பெக்டர்-ஆர்ஜி என்று பெயரிடப்பட்டுள்ளது.இதற்கு முன் 2011இல் ஏவப்பட்ட தொலைநோக்கி ஸ்பெக்டர்-ஆர் போல் இதுவும் ஒரு விண்வெளி நோக்குநிலையம்(space observatory) ஆகும்.அதைப் போலவே இதுவும் கருந்துளை,நியூட்ரான் ஸ்டார்ஸ் மற்றும் காந்தப் புலம் ஆகியவற்றை ஆய்வு செய்யும். ரசிய நாட்டின் பெருமைக்கு நீண்ட காலமாக அதன் விண்வெளி திட்டங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன.2011இலிருந்து சர்வ தேச விண்வெளி நிலையத்திற்கு(international space station) குழுக்களை அனுப்பும் திறமை பெற்ற ஒரே நாடு ரசியா மட்டுமே.ஆனால்அண்மைக் காலங்களில்  ரசிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோமோஸ் உள்ளே நடைபெற்ற ஊழல்கள் மற்றும் அமெரிக்க எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போட்டி ஆகியவற்றால் அதன் ஏகபோகம் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஜூலை 20ஆம் தேதி ஒரு ரசிய விண்வெளி வீரருடன் ஒரு இத்தாலி மற்றும் அமெரிக்க வீரர்களை சர்வ தேச விண்வெளி நிலையத்திற்கு(international space station)அனுப்ப உள்ளது.

பழமைப் படிமம்! புதுமைக் கண்டுபிடிப்பு
 

4.2 மில்லியன் வருடப் பழமையான குரங்குப் படிமம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கென்யாவில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.அதன் எடை ஒரு கிலோதான். இது தற்போது உலகிலேயே மிகச் சிறிய குரங்கான ‘டலாபோயின்’(talapoin) என்கிற இனக் குரங்குகளின் அளவேயுள்ளது.நானோபிதிக்கஸ் பிரவுனி (Nanopithecus browni‘) என்ற புதிய இனமாக இது சேர்க்கப்பட்டுள்ளது.இது வாழ்ந்த கென்யாவிலுள்ள வறண்ட புல்வெளிகளில்தான் சில ஆதி மனித முன்னோடிகளின் படிமங்களும் கிடைத்தன.

;